உள்ளூர் செய்திகள்
போராட்டம் ஒத்திவைப்பு

ரேசன்கடை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

Published On 2022-01-12 10:59 GMT   |   Update On 2022-01-12 10:59 GMT
கடலூரில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
கடலூர்:

நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு இன்று (12-ந் தேதி) போராட்டம் நடத்தப்படும் என்று நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். 

அதனை தொடர்ந்து கடலூரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வரை ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவு முறையை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News