செய்திகள்

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் ஈரோட்டில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில்

Published On 2019-05-11 17:59 GMT   |   Update On 2019-05-11 17:59 GMT
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே ஈரோடு மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து சதம் அடித்து வருகிறது. நேற்று ஈரோட்டில் 104 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது.
ஈரோடு:

அக்னி நட்சத்திரம் வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ஈரோடு மக்கள் குடைகளை பிடித்துக் கொண்டும், இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடி கொண்டும் செல்கின்றனர்.

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே ஈரோடு மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து சதம் அடித்து வருகிறது. நேற்று ஈரோட்டில் 104 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளை தேடி செல்கின்றனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லும் மக்கள் சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

வெயில் அதிகமாக இருப்பதால் இளநீர், கரும்பு சாறு, மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை தேடி மக்கள் படை எடுக்க தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து வெளிநாட்டு குளிர்பானத்தை தவிர்த்து அதிக அளவில் இளநீர், கரும்பு சாறு கடைகளுக்கு மக்கள் வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெயில் தாக்கத்திலிருந்து விடுபட தினமும் அதிக அளவில் நீர் பருக வேண்டும் எனவும், வெயில் காலங்களில் சூடான மற்றும் காரமான உணவுகள், எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். இது போன்ற உணவுகள் அஜீரண வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும் எனவும், பருத்தி ஆடைகள் வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால் வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளை பயன்படுத்தலாம் என்றும்,

உடல் சூட்டை தணிக்க அதிக அளவில் தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சி போன்ற பழங்கள், ஜூஸ் சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

Tags:    

Similar News