ஆன்மிகம்
பலிபீடம்

பலிபீடத்தை வழிபடும் முறை

Published On 2019-11-12 09:04 GMT   |   Update On 2019-11-12 09:04 GMT
ஆலயங்களில் கோபுர வாசலுக்கும், கொடி மரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு ‘பலிபீடம்’ என்று பெயர். இந்த பலிபீடத்தை வழிபடும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஆலயங்களில் கோபுர வாசலுக்கும், கொடி மரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு ‘பலிபீடம்’ என்று பெயர். நித்ய பூஜையின் முடிவில் பலிபீடத்தில் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அன்னம் வைப்பார்கள்.

இதை ‘பலிபோடுதல்’ என்று சொல்வார்கள். இந்த அன்னத்தை தெய்வங்கள் அனைவரும் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது பலிபீடத்தை தொட்டு வணங்குவதோ, உரசிச் செல்வதோ கூடாது.

இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம்மீது பட்டு விட்டாலே, ஒரு முறை குளிக்க வேண்டும் என்கிறது ஆகமங்கள்.
Tags:    

Similar News