செய்திகள்
நியூசிலாந்து அணி வீரர்கள்

மெதுவாக பந்துவீசிய நியூசிலாந்து அணிக்கு 60 சதவீதம் அபராதம் விதிப்பு

Published On 2020-02-08 15:56 GMT   |   Update On 2020-02-08 16:14 GMT
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் மெதுவான பந்துவீச்சு விகிதத்திற்காக நியூசிலாந்து அணிக்கு 60% அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஆக்லாந்து:

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.  இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது.  இந்திய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில், சஹால் 3 விக்கெட்டுகளையும் தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.  இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் (52) மற்றும் ஜடேஜா (54) அரை சதம் பூர்த்தி செய்தனர்.  பிரித்வி ஷா (24), மயங்க் அகர்வால் (3), கேப்டன் கோலி (15), கே.எல். ராகுல் (4), கேதர் ஜாதவ் (9), ஷர்துல் தாகூர் (18), சைனி (45) மற்றும் சாஹல் (10) ரன்களில் வெளியேறினர்.

எனினும் 48.3வது ஓவரில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களே எடுத்தது.  பும்ரா ரன் எதுவும் எடுக்கவில்லை.  இதனால் நியூசிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  2-0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் மெதுவான பந்துவீச்சு விகிதத்திற்கு நியூசிலாந்து அணிக்கு 60% அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ஐ.சி.சி.யின் விளையாட்டு வீரர்களுக்கான விதிகளின் பிரிவு 2.22ன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்படும்.

இதன்படி மேற்கொண்ட நேர அனுமதி பரிசீலனையில், அந்த அணி 3 ஓவர்கள் வரை, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலான பந்துவீச்சு விகிதம் கொண்டிருந்தது.  இதனை லாத்தம் ஒப்பு கொண்ட நிலையில் முறைப்படியான விசாரணை நடைபெற அவசியம் இல்லாமல் போனது.  இதற்கு முன் இந்திய அணி இதுபோன்று 3 முறை அபராத விதிப்பிற்கு உள்ளானது.
Tags:    

Similar News