உள்ளூர் செய்திகள்
திருப்பாலையில் இன்று நடந்த முகாமில் ஆர்வத்துடன் தடுப்பூசி போட வந்திருந்த பொதுமக்கள்.

மதுரை மாவட்டத்தில் 1,120 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-01-08 11:48 GMT   |   Update On 2022-01-08 11:48 GMT
மதுரை மாவட்டத்தில் இன்று 1,120 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மதுரை

மதுரை மாவட்டத்தில் 19&-வது கொரோனா தடுப்பூசிசிறப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. இதில் பொதுமக்கள் கியூ வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுச் சென்றனர். 

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில் “மதுரை மாவட்டத்தில் 1120 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. அதிகாலையில் தொடங்கிய முகாமில் ஆண், பெண் உள்பட இரு பாலரும் திரண்டு வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். 

சுகாதார ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மதுரையில் கொரோனா பாதிப்பு இருப்பதால் பொதுமக்களிடம் தடுப்பூசி போடுவதில் ஓரளவு வரவேற்பு உள்ளது என்றார்.

கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வந்தார். அங்கு நடந்து வரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News