செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது

Published On 2021-02-23 13:29 GMT   |   Update On 2021-02-23 13:29 GMT
திருவாரூரில் பணி நிரந்தரம் செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்:

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாலதி முன்னிலை வகித்தார். கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், சி.ஜ.டி.யூ. மாவட்ட தலைவர் ரா.மாலதி, மாவட்ட நிர்வாகிகள் அனிபா, பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 246 பெண்களை கைது செய்தனர்.
Tags:    

Similar News