உடற்பயிற்சி
ஹாக்கினி முத்திரை

புத்திமய கோசம் - ஹாக்கினி முத்திரை

Published On 2022-02-25 03:23 GMT   |   Update On 2022-02-25 03:23 GMT
யோகப் பயிற்சிகள் தினமும் பயின்று நான்கு அடுக்குகளையும் சுத்தப்படுத்தினால் நமது உணர்வு விரிந்து ஐந்தாவது அடுக்கிற்கு சென்று ஆத்ம சக்தியை விரிவடைய செய்யும்.
புத்திமய கோசம் நன்கு இயங்க ஹாக்கினி முத்திரை பயிற்சி செய்ய வேண்டும். நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் பத்து முறைகள். பின் இரு கை விரல்கள் நுனியையும் இணைத்து ஒரு பந்து போல் படத்தில் உள்ளபடி செய்யவும். எல்லா விரல் நுனிகளிலும் சிறிய அழுத்தம் கொடுக்கவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

இந்த முத்திரையால் பிட்டியூட்டரி, பீனீயல் சுரப்பிகள் நன்கு இயங்கும். மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் பாயும். நமது எண்ணம், சொல், செயல், நமக்கும் நன்மை விளைவிக்கும். மற்றவர்களுக்கும் நன்மை தரும்படி அமையும்.

இந்த சிறிய பயிற்சிகளை தினமும் காலை மாலை இரண்டு வேளைகளும் சாப்பிடும்முன் ஒரு மண்டலம் (48 ) நாட்கள் செய்யுங்கள். ஒவ்வொரு அடுக்கும் மிகச் சிறப்பாக இயங்கும். இதன் காரணமாக நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆனந்தமய கோசம் - உயிர் ஆற்றல் மிகச் சிறப்பாக இயங்கும்.
ஒரு மனிதனின் உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள உயிர் சக்திதான் “நான்” அந்த உயிர் ஆற்றலை மெய்யுணர்வு என்கிறோம். இது அழியாதது. அற்புத சக்தி வாய்ந்தது. இந்த உடல் மன இயக்கத்திற்கு ஆதாரமான சக்தி இதுவே. மற்ற உடல் உள்ளுறுப்புகளில் என்ன குறைபாடுகள் வந்தாலும், அதனை சரி செய்யும் ஆற்றல் இந்த உயிர் சக்திக்கு உண்டு.

மேற்குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள் தினமும் பயின்று நான்கு அடுக்குகளையும் சுத்தப்படுத்தினால் நமது உணர்வு விரிந்து ஐந்தாவது அடுக்கிற்கு சென்று ஆத்ம சக்தியை விரிவடைய செய்யும். உயிர் ஆற்றல் வெளிப்படும். புத்தி கூர்மையடையும். மனம் தெளிவடையும். உடல் ஆரோக்கியம், உள் அமைதி கிட்டும். வளமாக நலமாக வாழலாம்.
Tags:    

Similar News