ஆன்மிகம்
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பூட்டப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

நாகை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன

Published On 2021-04-27 05:05 GMT   |   Update On 2021-04-27 05:05 GMT
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நாகை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழகத்தில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், அழகு நிலையங்கள், சலூன், சினிமா தியேட்டர்கள், பார்கள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து நாகை நீலாயதாட்சியம்மன் கோவில், எட்டுக்குடி முருகன் கோவில், நாகை வெளிப்பாளையம் அகதீஸ்வரர் சிவன் கோவில், நாகூர் நாகநாதர்கோவில், நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில், கடம்பாடி மகாலட்சுமி சாய்பாபா கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், நாகூர் ஆண்டவர் தர்கா, நாகை ஊசி மாதா ஆலயம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News