உள்ளூர் செய்திகள்
நல்லம்பள்ளி சந்தையில் குவிந்த வியாபாரிகள்.

நல்லம்பள்ளி, காரிமங்கலம் வாரச்சந்தைகளில் குவிந்த வியாபாரிகள்

Published On 2022-01-11 11:17 GMT   |   Update On 2022-01-11 11:17 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல்லம்பள்ளி, காரிமங்கலம் வாரச்சந்தைகளில் வியாபாரிகள், விவசாயிகள் குவிந்தனர்.

தொப்பூர்:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் வார சந்தை நடைபெறும்.  மிகவும் பிரசித்தி பெற்ற இந்த வாரச்சந்தைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கவும், விற்கவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய வார சந்தையில் சுமார் 50 முதல் 80 லட்சம் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் இன்றைய சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்தது. இன்று நடந்த சந்தையில் ஆடு விலை 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது. 

சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இவை சுமார் 60 லட்சம் முதல் 70 லட்சத்தை தாண்டி விற்பனையானது. மேலும் நல்லம்பள்ளி வாரச் சந்தைக்கு வந்த வியா பாரிகள் மற்றும் பொது மக்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு முகக்கவசம்  அணி யாமல் வந்தவர்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது.

 இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக் கைகளை மீறுபவர் களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது. இதேபோல  தருமபுரி மாவட்டம் காரி மங்கலம வாரச்சந்தை செவ்வாய்க் கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கால்நடை சந்தை இன்று அதிகாலை முதலே சுறுசுறுப் புடன் இயங்கியது. வழக்கத் திற்கு மாறாக அதிக அள விலான கால் நடைகள் விற்பனை கொண்டுவரப் பட்டது. 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள், 500 க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் நாட்டுக் கோழிகள் சந்தைக்கு வந்த நிலையில் கால்நடை விற்பனை இன்று சுமார் ரூ.1.50 கோடி அளவிற்கு இருந்ததாகவும் பொங்கல் பண்டிகை காரணமாக விற்பனை அதிகரித்து உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News