செய்திகள்
கொரோனா வைரஸ்

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-06-23 14:49 GMT   |   Update On 2021-06-23 14:49 GMT
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
சிவகங்கை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதுடன் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 96ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 95 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் தற்போது அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 722 ஆக உள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வருவதால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கையை மாற்ற ஒத்துழைத்திட வேண்டும் என்றும் சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News