செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதம் - தூதருக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா

Published On 2021-03-09 17:56 GMT   |   Update On 2021-03-09 17:56 GMT
இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதற்கு பல்வேறு நாட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம்  குறித்து  விவாதம் நடத்தினர். இந்த கூட்டம் லண்டனில் உள்ள இந்திய தூதரக  வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நடைபெற்றது.

இதில் 18 இங்கிலாந்து எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அதில் 17 பேர் இந்திய அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினையை கையாள்வதையும், பத்திரிகை சுதந்திரத்தையும் தாக்கிப் பேசினர்.

இந்த விவாதத்தின் போது தொழிற்கட்சி மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் விவசாயிகளை இந்தியா  எதிர்ப்பாளர்களைப்போல் நடத்தியதற்காகவும், பத்திரிகைகள் மீது ஒடுக்குமுறை செய்ததாகவும், இணையம் நிறுத்தப்படுவதாகவும், ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதம் செய்ததற்கு அந்நாட்டு தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்க்லா இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரிடம் , இதுபோன்ற கலந்துரையாடல் மற்றொரு ஜனநாயக நாட்டின் அரசியலில் தலையிடுவதைக் குறிக்கும் என கூறினார்.

இங்கிலாந்து எம்.பி.க்கள் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை தவறாக சித்தரிப்பதன் மூலம் வாக்கு வங்கி அரசியலில் இருந்து விலகி இருக்கவேண்டுமென் அவர் அறிவுறுத்தியதாக மத்திய அரசின் அறிக்கை  தெரிவிக்கிறது.
Tags:    

Similar News