செய்திகள்
புனித யூதா ததேயு திருத்தலம்

புனித யூதா ததேயு திருத்தலத்தின் 42-வது ஆண்டு பெருவிழா: இன்று மாலை தேர் பவனி

Published On 2019-10-28 11:55 GMT   |   Update On 2019-10-28 11:55 GMT
சென்னை ஆலந்தூரை அடுத்த வாணுவம்பேட்டையில் உள்ள புனித யூதா ததேயு திருத்தலத்தின் 42-வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று தேர் பவனி நடக்கிறது.
சென்னை ஆலந்தூரை அடுத்த வாணுவம்பேட்டையில் உள்ள புனித யூதா ததேயு திருத்தலம் உள்ளது. இத்திருத்தலதின் 42-வது ஆண்டு பெருவிழா, கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கலந்து கொண்டார். 26-ந்தேதி நற்கருணை பெருவிழா நடந்தது. இதில் செங்கை மறைமாவட்டம் டெரி ஸ்டீபன் கலந்துகொண்டார்.

3-ம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நற்கருணை திருவிழா நடந்தது. இத்திருவிழாவில் செங்கை மறைமாவட்ட ஆயரின் பதில்குரு பாக்கிய ரெஜிஸ் தலைமை தாங்கினார்.

அதனைத்தொடர்ந்து 4-வது மற்றும் நிறைவு நாளான இன்று திருத்தூதர் பெருவிழாவுடன் ஆடம்பர தேர் பவனியும், அதனைத்தொடர்ந்து கொடியிறக்க நிகழ்வும் நடைபெறுகிறது.

இதில் பேரருட்பணி அருள் ராஜ் புனித தோமா தேசிய திருத்தலம் மற்றும் தோமையார் மறைமாவட்ட குருக்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பங்குதந்தை மார்ட்டின் ஜோசப் தலைமையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News