தொழில்நுட்பம்
ஏர்பாட்ஸ் ப்ரோ

அசத்தல் அம்சம் கொண்டு உருவாகும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ

Published On 2020-08-31 06:46 GMT   |   Update On 2020-08-31 06:46 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ அசத்தல் அம்சம் கொண்டு உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலினை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

மேலும் புதிய மாடலின் வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றும், தற்போதைய அம்சங்களே பெரும்பான்மையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், புதிய மாடலில் இன்-ஏர் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்படலாம் என சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. 



வயர்லெஸ் ஹெட்போன்களில் ஜெஸ்ட்யூர் வசதி சோனி மற்றும் போஸ் நிறுவனங்களின் பிரீமியம் மாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வரிசையில் தற்சமயம் ஆப்பிள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இன்-ஏர் ஜெஸ்ட்யூர் கொண்டு ஏர்பாட்சை தொடாமலேயே இசையை இயக்குவும், அழைப்புகளை ஏற்கவும் முடியும். 

இந்த அம்சம் இருந்தால், பயனர் கைகள் ஏர்பாட்சை நோக்கி வருவது கண்டறியப்பட்டு மியூசிக் பிளேபேக், சிரியை இயக்குவது மற்றும் அழைப்புகளை ஏற்பது போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். இத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை ஆன் / ஆஃப் செய்வதற்கான வசதியும் புது மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய இன்-ஏர் ஜெஸ்ட்யூர் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாக இருக்கும். காப்புரிமை பெறப்பட்ட இந்த அம்சம் புதிய ஏர்பாட்ஸ் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News