ஆன்மிகம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-10-22 07:03 GMT   |   Update On 2021-10-22 07:03 GMT
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனத்தில் வெளிப்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர், திருக்கல்யாண திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றிற்கு 21 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், மண்டகப்படிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 7 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் வெளி பிரகாரத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனத்தில் வெளிப்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். 9-ஆம் திருநாளான வருகிற 29-ந் தேதி தேரோட்டமும், 12-ம் திருநாளான நவம்பர் 1-ந் தேதி கோவில் மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் அரசு விதிகளின்படி நடைபெறுகிறது.
Tags:    

Similar News