செய்திகள்
மழை பாதிப்பு

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Published On 2021-10-21 11:21 GMT   |   Update On 2021-10-21 12:13 GMT
திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. 42 பேர் பலியான நிலையில், 6 பேரைக் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இன்றும் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர்  ஆகிய மாவட்டங்களுக்கு மோசமான வானிலையுடன் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள கடற்கரைகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ என்ற அளவில் இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. 
Tags:    

Similar News