செய்திகள்
பறிக்காமல் விடப்பட்ட மல்லிகைப்பூ

வாடும் மல்லிகைப்பூ- நாளொன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு

Published On 2020-03-26 11:26 GMT   |   Update On 2020-03-26 11:26 GMT
கொரோனா வைரஸ் அச்சத்தினால் பறிக்க ஆளில்லாமல் மல்லிகைப்பூ செடியிலேயே விடப்பட்டு உள்ளதுடன் நாளொன்றுக்கு ரூ.1 கோடி வர்த்தக பாதிப்பும் ஏற்படுகிறது.
ஈரோடு:

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  நேற்றுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இந்நிலையில், கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த நபர் (வயது 40) ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.

ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் அச்சத்தினால் ஈரோட்டின் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், மல்லிகை பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே விடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் நாளொன்றுக்கு 25 டன் பூக்கள் வீணாகி வருவதுடன்,  ரூ.1 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என பூ சாகுபடி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News