செய்திகள்
டிடிவி தினகரன்

இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவை இதுதான் - டிடிவி தினகரன்

Published On 2019-12-28 00:20 GMT   |   Update On 2019-12-28 00:20 GMT
நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம். இதுதான் இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவை என டிடிவி தினகரன் கிண்டலாக கூறியுள்ளார்.
சென்னை:

நாட்டிலேயே நிர்வாகத் துறையில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதை கிண்டல் செய்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம். இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு நம்மிடம் இருந்து விடைபெறுகிறது 2019-ம் ஆண்டு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News