செய்திகள்
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Published On 2020-11-22 07:32 GMT   |   Update On 2020-11-22 07:32 GMT
புதிய காற்றழுத்த தாழ்வினால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரம்:

தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வினால் நாளை மறுநாள் (24-ந்தேதி) முதல் தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கசசிமடம் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News