லைஃப்ஸ்டைல்
கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலை சட்னியில் இவ்வளவு சத்துக்கள் இருக்கா..

Published On 2021-06-08 05:15 GMT   |   Update On 2021-06-08 05:15 GMT
கறிவேப்பிலையை உணவில் அடிக்கடி சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.
சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது. கறிவேப்பிலை இலை பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வெகு விரைவிலேயே நீரிழிவு கட்டுப்படும். தினமும் கறிவேப்பிலைகளை பச்சையாகவோ அல்லது பக்குவம் செய்தோ சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.

தேவையான பொருட்கள்:
 
கறிவேப்பிலை - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வர மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
 
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
 
செய்முறை:
 
வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.

பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.

அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.
 
பின்னர் நன்கு கழுவிய கறிவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.

அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.

சிறிய துண்டு புளி கலந்து  அடுப்பை அணைத்து விடவும்.
 
ஆறவைத்த கலவையை உப்பு சேர்த்து  மிக்ஸியில் மைய அரைக்கவும், மிகவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து துவையலுடன் கலந்து இட்லி, தோசை, அல்லது சாதத்துடன்  பரிமாறலாம்.
Tags:    

Similar News