செய்திகள்
ரோகித் சர்மா

உலகக்கோப்பையில் இதுவரை 25 சதங்கள்: இங்கிலாந்து முதலிடம்

Published On 2019-07-04 10:22 GMT   |   Update On 2019-07-04 10:22 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 25 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அதிகபட்சமாக 7 சதங்கள் விளாசியுள்ளது.
உலகக்கோப்பையில் நேற்றுடன் 41 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இதில் மொத்தம் 25 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆடுகளங்கள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தொடரின் முதல் பாதியில் மழைக் காரணமாக ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தன. இதனால் சதங்கள் சற்று குறைந்துள்ளன.



இங்கிலாந்து அதிகபட்சமாக 7 சதங்கள் (பேர்ஸ்டோவ்-2, ஜோ ரூட் -2, ஜேசன் ராய், மோர்கன், பட்லர் தலா ஒன்று) விளாசியுள்ளது. ஐந்து சதங்களுடன் (ரோகித் சர்மா-4, தவான் -1) இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா நான்கு சதங்களும், வங்காள தேசம் மூன்று சதங்களும், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு சதங்களும், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு சதமும் அடித்துள்ளன.
Tags:    

Similar News