செய்திகள்
டெல்லி கங்காராம் மருத்துவமனை

டெல்லி கங்காராம் மருத்துவமனையில் 37 டாக்டர்களுக்கு கொரோனா

Published On 2021-04-08 18:05 GMT   |   Update On 2021-04-08 18:05 GMT
டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
டெல்லியில் இன்று 7,437 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

115 தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத ஐசியு மற்றும் வார்டு படுக்கைகளை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கும்படி அரசு கேட்டுள்ளது.

பல் மருத்துவர்கள், ஆயுஷ் டாக்டர்கள் கொருானா மருத்துவமனையில் பணியமர்த்தப்படுவார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 1000 முதல் 1500 படுக்கைகள் லோக் நயாக் மருத்துவமனையிலும், ஜிடிபி மருத்துவமனையில் 500 முதல் 1000 படுக்கைகளையும் அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் சர் கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா மருத்துவமனை  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News