செய்திகள்
விமான சேவை,

இந்தியா மீது விதித்த பயண தடையை நீக்கியது ஜெர்மனி அரசு

Published On 2021-07-05 21:37 GMT   |   Update On 2021-07-05 21:37 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.
பெர்லின்:

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலால் நாடு முழுவதும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டது.
இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதித்தன.

இதற்கிடையே, இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளில் டெல்டா வகை கொரோனா அதிகம் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த நாடுகளுடனான விமான சேவைக்கு ஜெர்மனி அரசு தற்காலிக தடை விதித்தது.

இந்நிலையில், இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு உள்ளதாக ஜெர்மனி நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News