செய்திகள்
கொரோனா வைரஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

Published On 2021-05-18 04:30 GMT   |   Update On 2021-05-18 04:30 GMT
கிராமங்களில் வாழும் மக்களுக்கு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் 2-ம் அலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மகளிர் சுய உதவிக்குழு மூலம் கிராமங்களில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திய நபர்கள், காய்ச்சல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் மொத்தம் 4 லட்சத்து 90 வீடுகள் உள்ளன. இதில் கடந்த வாரம் வரை 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் கணக்கெடுப்பு நடந்தது. இதில் 300-க்கும் அதிகமான குக்கிராமங்களில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.

இந்த கிராமங்களில் வாழும் மக்களுக்கு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதிப்பு உள்ள 90 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News