செய்திகள்
எச் ராஜா

குடியுரிமை சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன- எச் ராஜா பேட்டி

Published On 2020-03-15 13:52 GMT   |   Update On 2020-03-15 13:52 GMT
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ்- கம்யூனிஸ்டு கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் பா.ஜ னதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா துணை தலைவர் கபில் சிபில் சி.ஏ.ஏ., காரணமாக யாருடைய குடியுரிமையும் பறிக்கப்பட மாட்டாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ., கலவரத்தால் 52 உயிர்கள் பலியானதற்கும், நாடு முழுவதும் மத பதட்டத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியதற்கு சோனியா காந்தி பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சி.ஏ.ஏ., போலவே, என்.பி.ஆர்., குறித்தும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் குறிப்பாக தி.மு.க.,வும் வதந்திகளை பரப்பி மீண்டும் இஸ்லாமியர்களை தூண்டி விட பார்க்கிறார்கள்.

ஸ்டாலினோ அவரது குடும்பத்தினரோ அல்லது அவரது கட்சியினரோ என்.பி. ஆர். கணக்கெடுப்புக்கு தகவல் தர மாட்டோம் என சொல்லச் சொல்லுங்கள்.

என். பி. ஆர்., கணக்கெடுப்பில் பிறப்பு சான்றிதழ் எங்கே கேட்கப்பட்டுள்ளது?

காங்கிரஸ் மற்றும் தி.மு.க., தலைவர்கள் தேச துரோகமாக செயல்பட்டு, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கேட்கின்றனர்.

எனவே காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க., திராவிட கழகம், திருமாவளவன், வைகோ போன்றவர்களை அரசியல் களத்தில் இருந்து அறவே ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News