செய்திகள்
தபால் வாக்கு பெட்டி

4 தொகுதிகளிலும் தபால் வாக்குகளை அள்ளிய திமுக

Published On 2021-05-04 10:10 GMT   |   Update On 2021-05-04 10:10 GMT
பெரம்பலூர் (தனி) தொகுதியில் மொத்தம் உள்ள 4,281 தபால் வாக்குகளில், 3,771 வாக்குகள் பதிவானது. இதில் 455 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பெரம்பலூர் (தனி) தொகுதியில் மொத்தம் உள்ள 4,281 தபால் வாக்குகளில், 3,771 வாக்குகள் பதிவானது. இதில் 455 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

மீதமுள்ள வாக்குகளில் தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனுக்கு 2,454 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு 731 வாக்குகளும் கிடைத்தன. இதேபோல் குன்னம் தொகுதியில் பதிவான 2,166 தபால் வாக்குகளில் தி.மு.க. வேட்பாளர் சிவசங்கருக்கு 1,215 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு 859 வாக்குகளும் கிடைத்தன.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் தொகுதியில் பதிவான 1,983 தபால் வாக்குகளில் 567 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள வாக்குகளில் ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பாவுக்கு 1,011 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் 305 வாக்குகளும் பெற்றனர்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் பதிவான 2,760 தபால் வாக்குகளில் 408 நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள வாக்குகளில் தி.மு.க. வேட்பாளர் கண்ணன் 1,355 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் பாலு 860 வாக்குகளும் பெற்றனர். இதன்படி 4 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே அதிக அளவில் தபால் வாக்குகளை பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News