செய்திகள்
மழை

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-10-23 07:57 GMT   |   Update On 2021-10-23 08:32 GMT
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.

நாளை சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

25-ந் தேதி புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் மிக கனமழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும்.



26, 27-ந் தேதிகளில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழையும், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்துறை 9, சாத்தனூர் அணைக்கட்டு 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News