ஆன்மிகம்
பெருமாள் தரிசனம்

புரட்டாசி புதனில் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால்...

Published On 2020-10-14 03:19 GMT   |   Update On 2020-10-14 03:19 GMT
புதன் கிழமையை... பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமை நன்னாளில், பெருமாளை விரதம் இருந்து சேவியுங்கள். பெருமாளின் பேரருளால், பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று இனிதே வாழ்வீர்கள்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். இந்த நன்னாளில், விரதம் இருந்து பெருமாளை கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். குறைவின்றி வாழவைப்பான் கோவிந்தன்.

புண்ணியம் நிறைந்த மாதம் என்று புரட்டாசி மாதத்தைச் சொல்லுவார்கள். புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம். விரதம் இருந்து பெருமாள் கோவில்களுக்குச் சென்று பெருமாளை தரிசிப்பது இந்த மாதத்தில் ரொம்பவே விசேஷம்.

புரட்டாசி மாதத்தில்தான் பெருமாள் கோவில்கள் பலவற்றிலும் பிரம்மோத்ஸவ விழாக்கள் விமரிசையாக நடைபெறும். பத்துநாள் நடைபெறும் விழாவில், தினமும் பெருமாளுக்கு ஒவ்வொரு விதமான அலங்காரங்கள் நடைபெறும். தினமும் திருவீதியுலாக்கள் நடைபெறும்.

திருப்பதியிலும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோத்ஸவம் நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சி ஸ்ரீரங்கம், குணசீலம் பிரசன்னவேங்கடாசலபதி முதலான ஆலயங்களில் விழாக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பொதுவாகவே, புதன் கிழமை என்பது விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதற்கு உரிய நாள். மகாவிஷ்ணுவுக்கு உரிய மகத்தான நாள்.

புதன்கிழமையும் சனிக்கிழமையும் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாட்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். புரட்டாசி மாதத்தில், இந்த நாட்களில் ஏதேனும் ஒருநாளில், அவசியம் பெருமாள் கோவிலுக்குச் செல்வதும் பெருமாளை விரதம் இருந்து வழிபாடு செய்வதும் பன்மடங்கு பலன்களைத் தந்தருளக்கூடியது.

குறிப்பாக, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவது, இல்லத்தில் ஐஸ்வரியத்தைத் தந்தருளும் என்பதாக ஐதீகம். அதேபோல், விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிப் பாராயணம் செய்வதும் ‘ஓம் நமோ நாராயணாய;’ என்று திருமாலின் திருநாம மந்திரத்தைச் சொல்லி ஜபிப்பதும் மனதில் குழப்பமற்ற நிலையில் இருந்து மீட்டெடுக்கும். நிம்மதியையும் மனத்தெளிவையும் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

புதன் கிழமையை... பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமை நன்னாளில், பெருமாளை விரதம் இருந்து சேவியுங்கள். பெருமாளின் பேரருளால், பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று இனிதே வாழ்வீர்கள்.
Tags:    

Similar News