செய்திகள்
தாஜ்மஹால்

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

Published On 2021-03-04 07:23 GMT   |   Update On 2021-03-04 09:31 GMT
தாஜ்மஹாலில் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
ஆக்ரா:

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போனில் பேசிய மர்ம மனிதன் தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறினான். இதைத் தொடர்ந்து ஆக்ரா போலீசில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்றனர்.

தாஜ்மஹாலுக்குள் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தாஜ்மஹால் தற்காலிமாக மூடப்பட்டது. தாஜ்மஹாலை சுற்றிலும் வெடிகுண்டு இருக்கிறதா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அங்கு தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலில் தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்றும் தெரிய வந்தது.
Tags:    

Similar News