ஆன்மிகம்
உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்து கற்பூர ஆரத்தி காண்பித்த காட்சி.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம்

Published On 2021-08-21 08:54 GMT   |   Update On 2021-08-21 08:54 GMT
உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி, தாமரை, சம்பங்கி, துளசி ஆகியவை உள்பட பல வண்ணமலர்களால் 9 வகையான அலங்காரம் செய்யப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று வரலட்சுமி விரத பூஜை நடந்தது. கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை வைத்து, விஷ்வசேனர் வழிபாடு நடத்தி வரலட்சுமி விரத பூஜை தொங்கியது. அதைத்தொடர்ந்து புண்யாவதனம், கலச ஸ்தாபனம், ஆராதனை, லட்சுமி சஹஸ்ர நாமார்ச்சனை, அஷ்டோத்ர சத நாமாவளி ஆகியவை நடந்தது.

உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி, தாமரை, சம்பங்கி, துளசி ஆகியவை உள்பட பல வண்ணமலர்களால் 9 வகையான அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அலங்காரமும் ஒவ்வொரு தெய்வத்தின் அடையாளமாக இருந்தன. அப்போது ஆகம வேதப் பண்டிதர்கள், வர
லட்சுமி
விரதத்தின் மகிமை, பக்தர்கள் வழிபட வேண்டிய முறையை பற்றி விளக்கினார்கள்.

பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு 12 வகையான பிரசாதம், 5 வகையான நைவேத்தியம் செய்யப்பட்டது. உற்சவர் மற்றும் மூலவருக்கு மகா மங்கள ஆரத்தி நடந்தது. அத்துடன் வரலட்சுமி விரத பூஜை நிறைவடைந்தது. வரலட்சுமி விரத பூைஜ நிகழ்ச்சிகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, மாநில மந்திரி வேணுகோபால்கிருஷ்ணா, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News