உள்ளூர் செய்திகள்
கலெக்டர் விஷ்ணு.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத தனி அறை-பிளஸ்-2 தேர்வை பார்வையிட்ட கலெக்டர் பேட்டி

Published On 2022-05-05 10:29 GMT   |   Update On 2022-05-05 10:29 GMT
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது என பிளஸ்-2 தேர்வை பார்வையிட்ட பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறினார்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் இன்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. 

பாளை பர்கிட் மாநகரம் அரசு பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, முதன்ைம கல்வி அதிகாரி சுபாஷினி ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக 73 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். 
இந்த தேர்வு பணியில் 1,582 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

தேர்வை கண்காணிக்க 186 பறக்கும்படை நியமிக்கப் பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மாணவ-மாணவிளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை சோதிக்கப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது.

இதுவரை கொரோனா தொற்று உள்ள மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத தனி அறை, அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News