தொழில்நுட்பம்

உலகின் முன்னணி வீடியோ கேமான பப்ஜி மொபைல்

Published On 2019-06-13 08:03 GMT   |   Update On 2019-06-13 08:06 GMT
உலகில் அதிகம் பேர் விளையாடும் வீடியோ கேமாக பப்ஜி இருக்கிறது. இதனை உலகம் முழுக்க எத்தனை பேர் விளையாடுகின்றனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.



பப்ஜி மொபைல் கேம் உலகில் அதிகம் பேர் விளையாடும் வீடியோ கேமாக இருக்கிறது. இதனை உலகம் முழுக்க சுமார் 10 கோடி பேர் விளையாடி வருகின்றனர். டென்சென்ட் நிறுவனத்தின் பேட்டில் ராயல் கேம் கடந்த மாதம் 14.6 கோடி டாலர்களை வருவாயாக ஈட்டியது.

இதில் பெரும்பான்மை தொகை இன்-கேம் பர்சேஸ் மூலம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம் விளையாடுவோர் ஸ்கின் மற்றும் காஸ்டியூம்களை வாங்கி கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகின்றனர். கிரேட் வால் செக்யூரிட்டீஸ் எனும் நிறுவனம் வெளியிட்ட விவரங்களில் பப்ஜி மொபைல் மொத்தம் 7.6 கோடி டாலர்களை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.



இந்தியா, சீனா மற்றும் பல்வேறு இதர நாடுகளில் பப்ஜி மொபைல் கேமிற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் வருவாயில் அசுர வளர்ச்சியை பப்ஜி மொபைல் பெற்றிருக்கிறது. எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து டென்சென்ட் கேமில் சண்டை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை குறைத்ததது.

சமீபத்திய அப்டேட்டில் ப்பஜி மொபைல் சுமார் 40 கோடி டவுன்லோடுகளை கடந்ததாகவும், தினமும் சுமார் ஐந்து கோடி பேர் பப்ஜி கேமினை விளையாடி வருவதாக தெரிவித்தது.
Tags:    

Similar News