செய்திகள்
உக்ரைன் விளாடிமிர் ஜிலென்ஸ்

அதிபரை தகுதி நீக்கம் செய்யும் சட்டம்: உக்ரைன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

Published On 2019-09-11 12:35 GMT   |   Update On 2019-09-11 13:58 GMT
தேசத்துக்கு துரோகம் செய்தால் அதிபரை கூட பதவியில் இருந்து நீக்கம் செய்யும் விதமான சட்டம் உக்ரைன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிவ்:

உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக விளாடிமிர் ஜிலென்ஸ்கை கடந்த மே மாதம் பதவி ஏற்றார். இவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது 'தேசத்துரோகத்தில் ஈடுபட்டால் அதிபரைக்கூட உடனடியாக பதவி நீக்கம் செய்யக்கூடிய வகையிலான சட்டம் உருவாக்கப்படும்’ என வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில், தனது தேர்தல் வாக்குறுதியின் படி தேச துரோகத்தில் ஈடுபடும் அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய சட்ட மசோதாவை கடந்த மாதம் பாரளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 



இதையடுத்து, பல கட்ட விவாதங்கள் முடிவடைந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம்தேசத்துரோகம் மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால்  அதிபரை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்யலாம்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய சட்டம் அரசு நிர்வாகத்தில் நிலவிவரும் இடர்பாடுகள் மற்றும் குறைகளை தீர்க்க மிகப்பெரிய அளவில் உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News