செய்திகள்
இஸ்கான் ஊழியர்கள் சமையல் செய்யும் காட்சி

உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கும் இஸ்கான் கோவில்

Published On 2021-04-29 06:19 GMT   |   Update On 2021-04-29 06:19 GMT
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவின்றி வாடும் மக்களுக்கு டெல்லி இஸ்கான் கோவில் சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் ஒவொரு நாளும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பரவலாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளால் வறுமையில் வாடுவோரின் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. வேலைக்கும் செல்ல முடியாமல் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அல்லல்படுவோரும் உள்ளனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உதவிகளை செய்கின்றனர்.

அவ்வகையில், டெல்லியில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்கு டெல்லி இஸ்கான் கோவில் நிர்வாகம் இலவச உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இஸ்கான் கோவிலின் இளம் துறவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பசியால் வாடும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு வழங்கிவருகின்றனர். 
Tags:    

Similar News