செய்திகள்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் போனஸ் ஒப்பந்தமானதை படத்தில் காணலாம்.

வெள்ளகோவிலில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஒப்பந்தம்

Published On 2021-10-29 08:21 GMT   |   Update On 2021-10-29 08:21 GMT
போனஸ் மூலம் வெள்ளகோவில் வட்டாரத்திலுள்ள 7 ஆயிரம் விசைத்தறிகளில் வேலை செய்யும் 50 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் பயணியர் விடுதியில்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன் முன்னிலையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளிடையே நடைபெற்றது.

இதில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தறி ஓட்டுபவர், பாவுஓட்டுபவருக்கு ரூ.1,250, நூல் சுற்றுபவர்க்கு ரூ.800, பாபு ஓட்டுபவருக்க்கு ரூ.500, பாவு பிணைப்பவருக்கு ரூ.200, மேஸ்திரிக்கு ரூ. 200, தார் போடுவோருக்கு ரூ.300, தார் எடுப்பவர், நூல் காய போடுபவர்.

பீஸ் மடிப்பவர்களுக்கு ரூ.310 வழங்குவதாக நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஆனது. இந்த பேச்சுவார்த்தையால் வெள்ளகோவில் வட்டாரத்திலுள்ள 7 ஆயிரம் விசைத்தறிகளில் வேலை செய்யும் 50 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

வெள்ளகோவில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்,முத்தூர் காமராஜ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க 413 நெசவாளர்களுக்கு ரூ.16 லட்சத்து 12 ஆயிரத்து 275ஐஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் தீபாவளி போனஸ் தொகையாக  வழங்கினார்.

இதில் கைத்தறி உதவி இயக்குனர் மணிமுத்து, மேலாளர் சித்ரா,கைத்தறி ஆய்வாளர் கார்த்திக்,முத்தூர் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கோவிந்தராஜ், தி.மு.க.ஒன்றிய செயலாளர் மோள கவுண்டன் வலசு கே.சந்திரசேகரன், தி.மு.க.நகர செயலாளர் கே.ஆர்.முத்துக்குமார், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கே.கே.ரவிச்சந்திரன், முத்தூர் தி.மு.க. நகர செயலாளர் மு.க.அப்பு, உரிமையாளர் சங்கம் மற்றும் தொழிற் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் எம்.எஸ். மோகன செல்வம், ஏ.எம்.சி.செல்வராஜ். எம்.வி. பாலு, வி.வி.தம்பிதுரை, எஸ்.சதாசிவம், எஸ்.கதிர்வேல், புஷ்பலிங்கம்,வேலுச்சாமி, நாட்ராயன் உட்பட பலர் கலந்து கொணடனர்.

முன்னதாக‌ வெள்ளகோவில் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் எஸ்.என்.பி., நகரில் ரூ.18 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி  வைத்தார்.

அப்போது தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஜெயக்குமார், விஜயகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News