லைஃப்ஸ்டைல்
பப்பாளி

பப்பாளியும், மருத்துவ பயன்களும்...

Published On 2021-10-30 08:20 GMT   |   Update On 2021-10-30 08:20 GMT
பப்பாளி மருத்துவ குணம் மிகுந்தது என்பதால் பழப் பிரியர்களிடம் பப்பாளிக்கு மிகுந்த வரவேற்பு காணப்படும். இதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோம்...
பப்பாளி விதைகள் ஒட்டுண்ணிகளுக்கு எதிராகவும், வலியை குறைப்பதிலும் பயன்படுகிறது. வயிற்றுவலி, படர் தாமரை ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சுவையிலும், சத்து மிகுதியிலும் பப்பாளிப் பழத்திற்கு தனி இடம் உண்டு. எளிதில் ஜீரணமாகும், மருத்துவ குணம் மிகுந்தது என்பதால் பழப் பிரியர்களிடம் பப்பாளிக்கு மிகுந்த வரவேற்பு காணப்படும். இதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோம்...

பப்பாளியின் அறிவியல் பெயர் ‘காரிகா பப்பாயா’. அதிகபட்சம் 20 அங்குல நீளமும், 12 அங்குல அகலமும் விளையக் கூடியது. மிகக் குறைந்த ஆற்றல் வழங்கக்கூடியது. பப்பாளியில் கொழுப்புச்சத்து கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.

தாது உப்புக்களும், வைட்டமின்களும் ஏராளம் உள்ளன. புதிதாக பறிக்கப்பட்ட 100 கிராம் பழத்தில் 61.8 மில்லிகிராம் ‘வைட்டமின் சி’ உள்ளது. இது ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் கிடைப்பதைவிட அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது. உடலுக்கு தீங்கு தரும் நோய் காரணிகளை விரட்டுவதிலும், நோய்த்தடுப்பு மண்டலத்தை புத்துணர்ச்சியாக வைப்பதிலும் ‘வைட்டமின் சி’ பங்கெடுக்கிறது. அதேபோல பப்பாளிப் பழத்தில் ‘வைட்டமின் ஏ’, மிகுதியான அளவில் உள்ளது. பீட்டா கரோட்டின், லுட்டின், ஸி-சாந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற புளோவனாய்டுகளும் இதிலுள்ளது.

தோல் பளபளப்புத் தன்மையுடன் இருக்கவும், பார்வைத் திறனுக்கும் ‘வைட்டமின் ஏ’ அவசியம். பப்பாளியில் போலிக் அமிலம், பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயாமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலுக்கு புத்துணர்ச்சி வழங்கும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கும்.

புத்துணர்ச்சி மிக்க பப்பாளியில், அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. 100 கிராம் பப்பாளி 257 மில்லிகிராம் பொட்டாசியம் கொண்டுள்ளது. உடற்செல்கள் மற்றும் சருமம் பளபளப்புத் தன்மையுடன் விளங்க பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் இது உதவி புரிகிறது.
Tags:    

Similar News