செய்திகள்
எடியூரப்பா

10 தொகுதிகளில் பாஜக முன்னிலை- கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா

Published On 2019-12-09 04:49 GMT   |   Update On 2019-12-09 10:21 GMT
கர்நாடகத்தில் 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால் ஆட்சியை தக்க வைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு:

கர்நாடக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 17  இடங்களில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.  காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை சந்தித்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். காலை 9.30 மணி நிலவரப்படி பாஜக 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலா 2 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தன.



கர்நாடகத்தில் தற்போது பதவி வகிக்கும் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி தொடர கட்டாயம் 6 தொகுதிகளில், பாஜக வெற்றி பெறவேண்டும். தற்போதுள்ள முன்னிலை நிலவரம், பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளது.  இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், எடியூரப்பா தனது ஆட்சியை தக்க வைப்பார். 
Tags:    

Similar News