செய்திகள்
தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீரை ஊற்றிய பொதுமக்களை படத்தில் காணலாம்.

ஜப்தி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

Published On 2021-02-20 04:21 GMT   |   Update On 2021-02-20 04:21 GMT
ஜப்தி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திங்கள்சந்தை

இரணியல் அருகே குருந்தன்கோட்டை சேர்ந்த தங்கரத்தினம்(வயது 50), தொழிலாளி. இவருடைய தாயார் ஒருவரிடம் ரூ.75 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதனை திருப்பி கொடுக்கவில்லை. இதற்கிடையே அவருடைய தாயார் இறந்து விட்டார்.

இதற்கிடையே கடன் கொடுத்தவர் இரணியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில், தங்கரத்தினத்தின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி கோர்ட்டு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று தங்கரத்தினத்தின் வீட்டில் இருந்து பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கரத்தினம் குடும்பத்துடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைக்கண்டு அதி்ர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News