செய்திகள்
செல்லிப்பட்டு படுகை அணையின் நடுப்பகுதியில் சேதமடைந்து இருப்பதை காணலாம்

சங்கராபரணி ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம்- செல்லிப்பட்டு படுகை அணை உடையும் அபாயம்

Published On 2021-11-21 02:37 GMT   |   Update On 2021-11-21 02:37 GMT
சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் செல்லிப்பட்டு படுகை அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருக்கனூர்:

திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு கிராமத்தில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த படுகை அணை உள்ளது. இந்த அணையில் நடுப் பகுதி சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். இருப்பினும் தொடர்ந்து சேதம் அடைந்து வருகிறது.

இதனை சரிசெய்ய வேண்டும் எனவும், அணையை பாதுகாக்க வேண்டும் என்றும் பலமுறை அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் கற்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அணை உடைந்தால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது. எனவே அணையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News