ஆட்டோமொபைல்
எம்.வி. அகுஸ்டா டூரிஸ்மோ வெலோஸ் 800

அசத்தல் அம்சங்கள் நிறைந்த எம்.வி. அகுஸ்டா டூரிஸ்மோ வெலோஸ் 800

Published On 2019-09-11 01:15 GMT   |   Update On 2019-09-11 01:15 GMT
எம்.வி. அகுஸ்டா நிறுவனத்தின் புத்தம் புதிய டூரிஸ்மோ வெலோஸ் 800 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



இத்தாலியைச் சேர்ந்த பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான எம்.வி. அகுஸ்டா தனது புதிய மாடல் டூரிஸ்மோ வெலோஸ் 800 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் அகுஸ்டா தயாரிப்புகளை மோட்டோராயல் நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் கைனடிக் குழும நிறுவனமாகும். இந்த மாடலின் விலை சுமார் ரூ.18.99 லட்சமாகும். 

புதிய மோட்டார்சைக்கிள் நீண்டதூர பயணத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 798 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 சிலிண்டர் மோட்டார் உள்ளது. 110 ஹெச்.பி. திறனை 10,150 ஆர்.பி.எம். வேகத்திலும், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,100 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 

சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ப 90 சதவீத டார்க் இழுவிசையை 3,800 ஆர்.பி.எம். வேகத்திலும் இது வெளிப்படுத்தும் திறன் கொண்டது. சர்வதேச அளவில் டூரிஸ்மோ 4 வேரியன்ட்களில் வந்துள்ளது. ஸ்டாண்டர்ட், 800 லஸ்ஸோ, லஸ்ஸோ எஸ்.சி.எஸ். மற்றும் லிமிடெட் எடிஷன் ஆர்.சி. எஸ்.சி.எஸ். ஆகியவையாகும். 



இந்தியாவில் இந்நிறுவனத்தின் ஸ்டாண்டர்டு மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. பிரேக்குகள் துல்லியமாக பிடிப்பதற்கு வசதியாக இதில் பிரெம்போ நிறுவனத்தின் 4 பிஸ்டன் காலிப்பர்ஸ் குவிக் ஷிப்டர் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. 8 நிலையிலான டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி உள்ளது. லஸ்ஸோ மாடல் தேவைப்படுவோர் ஆர்டர் செய்தால் அதை மோட்டோராயல் நிறுவனம் இறக்குமதி செய்து தரும். எஸ்.சி.எஸ். மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

இதில் குரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் நீண்ட தூர பயணத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக இரண்டு பக்கத்திலும் பெட்டி வைக்கும் வசதியும் உள்ளது. இதில் ஸ்மார்ட் கிளட்ச் வசதி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இதே பிரிவில் உள்ள டைகர் (ரூ.13.39 லட்சம்), மல்டிஸ்டிராடா 950 (ரூ.12.84 லட்சம்) ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.
Tags:    

Similar News