லைஃப்ஸ்டைல்
குழந்தையை ஏசி அறையில் உறங்க வைக்க சில முன்னெச்சரிக்கைகள்

குழந்தையை ஏசி அறையில் உறங்க வைக்க சில முன்னெச்சரிக்கைகள்

Published On 2020-09-05 05:01 GMT   |   Update On 2020-09-05 05:01 GMT
நீங்கள் உங்கள் குழந்தையை ஏசி அறையில் உறங்க வைக்கின்றீர்கள் என்றால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் முழுவதும் பரவிய ஆடையை உங்கள் குழந்தைக்கு அணிவித்து விடுங்கள். கால்களுக்கு சாக்ஸூம் கைகளுக்கு கிளவுஸும் அணிந்து விடுங்கள். அல்லது உங்கள் குழந்தையின் முகத்தைத் தவிர்த்து உடல் முழுவதையும் போர்த்தி விடுங்கள்.

தொடர்ந்து ஏசியை பயன் படுத்துவதால், அதற்குள் பல தூசிகள் படிந்திருக்கும். அதனால் அவ்வப்போது ஏசியின் மேல் பாகத்தைக் கழட்டி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் தூசி படிந்த ஏசி காற்றின் மூலமாகக் குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடும்.

உடனே சூடான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். குழந்தையை நீங்கள் ஏசி அறையில் இருந்து எடுத்துச் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உடனே அதிக வெயில் படும் இடத்திற்காே அல்லது சூடான இடத்திற்கோ எடுத்துச் செல்லக்கூடாது. திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம் குழந்தையின் உடலைப் பாதிக்கும்.

தினம் ஏசி பயன்பாட்டிற்கு முன்னர், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அறையில் உள்ள கதவுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச் சீலைகளை முழுவதுமாக நீக்கி வையுங்கள்.இதனால் பழைய காற்று வெளியேறி புதிய சுத்தமான காற்று அறையின் உள்ளே பரவும். கூடுதலாக போதிய சூரிய வெளிச்சம் அறையில் பரவ சாத்தியம் ஏற்படும். இதனால் அறையில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்.
Tags:    

Similar News