உள்ளூர் செய்திகள்
கள்ளழகரை பார்ப்பதற்காக நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் மதுரை வீதிகளில் கிடைத்த இடங்களை பயன்படு

மதுரை வீதிகளில் உறங்கிய பக்தர்கள்

Published On 2022-04-16 10:22 GMT   |   Update On 2022-04-16 10:22 GMT
கள்ளழகரை தரிசிப்பதற்காக பக்தர்கள் காத்திருந்து மதுரை வீதிகளில் உறங்கினர்.
மதுரை

மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றால் கடந்த 2ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பின்றி உள் திருவிழாவாக நடத்தப்பட்ட இந்த விழா தற்போது பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடந்து வருகிறது. 

2 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் மதுரைக்கு வந்ததால் அவரை லட்சக் கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து  கொண்டே இருந்தனர். அவர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என்று முழங்கியபடி தோல்பை களில் நிரப்பிய தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். 

தல்லாகுளம் பெருமாள் கோவிலை சுற்றியுள்ள மண்டகப்படிகளில் “வாராரு...வாராரு... அழகர் வாராரு....”  என்ற பாடலே எங்கும் ஒலித்தபடி இருந்தது. அதை கேட்டவர்கள் யாருமே தன்னை மறந்து நடன மாடாமல்  இருக்க முடிய வில்லை. இளைஞர் பட்டாளம் இந்தபாடலை கேட்டு குழுவாக நடனமாடினர். அவர்களுக்கு போட்டி யாக இளம்பெண்களும் நடனமாடியதை பார்க்கமுடிந்தது. 

மேலும் இளைஞர் பட்டா ளங்கள் சங்கு போன்ற ஒலி எழுப்பக்கூடிய விசில் பொம்மைகளை ஊதிக் கொண்டே இருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் இந்த சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. 

அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தில் இருந்து பக்தர்கள் பிர மாண்ட சப்பரத்தை தலை யில் சுமந்தபடி வலம் வந்த னர். மானாமதுரை அருகில் உள்ள தம்மம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அரிவா ளுடன் குறி சொல்லியதையும் பார்க்க முடிந்தது. 

அதேபோன்று அரிவாள்மீது நின்று முதிய பக்தர்களுக்கு அருளாசி வழங்கி னார். தல்லாகுளம் கோவில் மைதானத்தில் விடிய,விடிய கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

அழகர் ஆற்றில் இறங்கு வதை காண நேற்று மாலை யில் இருந்தே மதுரைக்கு பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியது. நள்ளிரவில் அவர்கள் மதுரை வீதிகளில் ஆங்காங்கே கிடைத்த இடத்தை  பயன்படுத்திக் கொண்டு உறங்கினர். தல்லாகுளம் வீதிகளில் எங்கு பார்த்தாலும் நள்ளிர வில் பக்தர்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. 

மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு அரசு சித்திரை பொருட்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக தல்லாகுளம் பெருமாள்கோவில் மைதானத்தில் தனியார் சார்பில்  ராட்டினம் மற்றும் உணவு விற்பனை கடைகள் போடப் பட்டிருந்தன. அதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பொருட்களை வாங்கினர். 

ஆங்காங்கே பக்தர்கள் வசதிக்காக நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது.


Tags:    

Similar News