லைஃப்ஸ்டைல்
பெண்களே தனித்திறன்களை வளர்த்து வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி?

பெண்களே தனித்திறன்களை வளர்த்து வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி?

Published On 2020-07-28 04:47 GMT   |   Update On 2020-07-28 04:47 GMT
கொரோனா வைரஸ் தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பலரும் பயனுள்ள வழியில் செலவிட தொடங்கி இருக்கிறார்கள். பெண்களே நீங்களும் தனித்திறன்களை வளர்த்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லலாம்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது அவசியமானதாக இருக்கிறது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பலரும் பயனுள்ள வழியில் செலவிட தொடங்கி இருக்கிறார்கள். பொழுதைப்போக்குவதற்கு சிரமப்படுபவர்களும் சில வழிமுறைகளை பின்பற்றினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவாகி விடலாம். தனித்திறன்களை வளர்த்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லலாம். அதற்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள்:

* ஏதாவதொரு புதிய திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். இணையதளத்தில் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. தொழில் ரீதியாக உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு தெரியாத புதிய விஷயங்கள் எதையாவது கற்றுக்கொண்டால் கூட அது வீண்போகாது. அதனை கொண்டு முதலீடு செய்து வாழ்க்கையில் முன்னேற தொடங்கலாம்.

* பெண்கள் ஏதாவதொரு கைவினைக்கலையை கற்றுக்கொள்ளலாம். இணையதள வீடியோக்கள் அதற்கு வழிகாட்டும். எளிமையான முறையில் விளக்கி புரியவைக்கும் விதத்தில் இருப்பதால் சிரமமில்லாமல் கற்றுக்கொண்டு சம்பாதிக்க தொடங்கலாம்.

* செல்போனில் வீணாக பொழுதைபோக்குவதை விட புத்தகங்கள் படிப்பது உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும். தெரியாத விஷயங்களை படித்து தெரிந்து கொள்வது வெளி உலகத்தொடர்பை விசாலப்படுத்தும்.

* நோய் எதிர்ப்பு தரும் பழங்கள், ஜூஸ்களை பருகுங்கள். ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த பொருட்களை உணவில் அதிகம் சேருங்கள். இந்த சமயத்தில் அவை உடலுக்கு அதிகம் தேவை.

* வெளி உணவுகளை தவிர்ப்பதற்கு பதிலாக அதே உணவை வீட்டிலேயே தயார் செய்வதற்கு பழகுங்கள். அது சமையல் கலை மீது உங்களை நாட்டம் கொள்ள வைக்கும். புதிய ரெசிபிகளை தயார் செய்து ருசித்துப்பார்க்க தூண்டும்.

* வீட்டின் மொட்டைமாடி, பால்கனியில் செடிகள் வளர்க்கலாம். அறைக்குள்ளும் உள் அலங்கார செடிகள் வளர்க்கலாம். வீட்டின் மொட்டை மாடியை மினி தோட்டமாக மாற்றுவதற்கு உகந்த நேரமாக இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

* வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், வேலை செய்வதற்கு ஏற்ற அலுவலக சூழலை உருவாக்குங்கள். படுக்கை அறையில் இருந்து அலுவலக வேலைபார்ப்பதை தவிருங்கள். இடையூறு ஏற்படுத்தும் விஷயங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துங்கள்.

* உடல் ரீதியான சமூக இடைவெளி என்பது முழுமையான தனிமையில் வாழ்வது என்று அர்த்தமல்ல. குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவது, நண்பர்களுடன் வீடியோ காலில் அரட்டை அடிப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் நேஇரத்தை செலவிடாமல் சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடந்தவர்கள் இந்த தருணத்தை அவர்களுக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Tags:    

Similar News