ஆன்மிகம்
காரைக்கால் முப்பைத்தங்குடி கைலாசநாதர் கோவிலில் பஞ்சாங்க பூஜை

காரைக்கால் முப்பைத்தங்குடி கைலாசநாதர் கோவிலில் பஞ்சாங்க பூஜை

Published On 2021-04-15 06:00 GMT   |   Update On 2021-04-15 06:00 GMT
காரைக்கால் முப்பைத்தங்குடி கிராமத்தில் காமாட்சி அம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் பஞ்சாங்க பூஜை கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடைபெற்றது.
காரைக்கால் முப்பைத்தங்குடி கிராமத்தில் காமாட்சி அம்பிகா சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பஞ்சாங்க பூஜை கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடைபெற்றது. நவ நாயகர்களில் இந்த ஆண்டு செவ்வாயின் ஆட்சி மங்கலத்தை வழங்கும் என்றும் மந்திரியாக புதன் பகவான் விளங்குவதால், எல்லா வகையான முன்னேற்றத்தையும் வழங்க பிரார்த்தனை செய்யப்பட்டது.

அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் துணைத் தலைவர் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் பஞ்சாங்கத்தின் சிறப்பு, இந்த ஆண்டின் பலன்கள், கிரக சஞ்சாரங்கள் பெயர்ச்சிகள், கிரகணங்கள் உள்ளிட்ட சிறப்புகளை எடுத்துரைத்து ஆசி வழங்கினார். காரை மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் குருக்கள், பொருளாளர் ரமேஷ் குருக்கள் மற்றும் சக்தி குருக்கள், ரவி, சுவாமிநாத குருக்கள் உள்ளிட்டோர் வேதபாராயணம் செய்து வழிபட்டனர். தனி அதிகாரி கருணாநிதி மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News