செய்திகள்
கோப்புபடம்

சுங்காரமுடக்கு-குடிமங்கலம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா

Published On 2021-07-22 11:36 GMT   |   Update On 2021-07-22 11:36 GMT
பருவமழை காலங்களில் தரை மட்ட பாலத்திலுள்ள குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வெள்ளப்பெருக்கு செல்லும் நிலை உள்ளது.
உடுமலை :

பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட தொலைவு உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் ஓடைகள் குறுக்கிடுகின்றன. குறிப்பாக  உப்பாறு ஓடையுடன் இணையும் 10க்கும் மேற்பட்ட ஓடைகள்  சாலையின் குறுக்கில் அமைந்துள்ளன.

இதில் பெதப்பம்பட்டி அருகில் உள்ள ஓடையின் மீது சில ஆண்டுகளுக்கு முன்  உயர் மட்ட பாலம் நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டது. ஆனால்  சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலத்துக்கு இடையிலுள்ள ஓடையின் குறுக்கே உள்ள தரை மட்ட பாலம் மேம்படுத்தப்படாமல் உள்ளது.

அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு தரைமட்ட பாலம்  சாலையை விட பள்ளமாக அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.மேலும் பருவமழை காலங்களில் தரை மட்ட பாலத்திலுள்ள குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலையில்  வெள்ளப்பெருக்கு செல்லும் நிலை உள்ளது.

மாநில நெடுஞ்சாலையில் கனரக வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் விரைவில் சுங்காரமுடக்கு பகுதியில் உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News