தொழில்நுட்பம்

மூன்று ஏ.ஐ. பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் எல்.ஜி. ஸ்மார்ட்போன்

Published On 2019-06-06 10:09 GMT   |   Update On 2019-06-06 10:09 GMT
எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதற்கான டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது.



எல்.ஜி. நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை புதிய டீசர்கள் மூலம் உறுதி செய்துள்ளது. எல்.ஜி.யின் புதிய ஸ்மார்ட்போன்கள் டபுள்யூ என்ற சீரிசில் அறிமுகமாக இருக்கிறது. எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கின் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.



அமேசான் வலைதளத்தில் எல்.ஜி.யின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் அமேசான் ஸ்பெஷல்ஸ் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. டீசரில் “W FOR THE WIN, Coming Soon” எனும் வாசகம் மற்றும் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றிய விவரமும் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதன் டிஸ்ப்ளேவில் நாட்ச்களை பயனர் விருப்பப்படி கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும் பல்வேறு கேமரா மோட்களும் வழங்கப்படுகிறது.



மூன்று பிரைமரி கேமரா லென்ஸ்களில் வழக்கமான லென்ஸ், வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் போர்டிரெயிட் மோட் புகைப்படங்களை எடுக்கும் கேமரா இடம்பெறும் என தெரிகிறது. டீசர்களில் எல்.ஜி. டபுள்யூ ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன,.

புதிய எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் பேக் மற்றும் பிளாக், புளு, கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும். இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் விலை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News