செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்ற போது எடுத்த படம்.

திருச்சி விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை

Published On 2020-11-22 09:23 GMT   |   Update On 2020-11-22 09:23 GMT
திருச்சி விமான நிலையத்தில் ஆண்டிற்கு ஒரு முறை பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் ஆண்டிற்கு ஒரு முறை பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. அப்போது, பயங்கரவாதி ஆயுதங்களுடன் விமான நிலையத்திற்குள் நுழையும் போது அதை தடுக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகையின் போது, பயங்கரவாதி போல் ஒருவர் வேடமிட்டு துப்பாக்கியை கையில் ஏந்தி அனைவரையும் சுடுவது போன்றும், அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கையாளும் முறை குறித்தும் செய்து காட்டப்பட்டது. இந்த ஒத்திகையில் சுமார் 50 தொழில் பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் முனைய மேலாளர்கள், அதிகாரிகள் விமான நிலைய தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News