செய்திகள்
ஆலம்பட்டி இணைப்பு சாலையில் முறையாக வேகத்தடை இல்லாமல் இருப்பதை காணலாம்

திருமங்கலம் அருகே சாலை தடுப்புகளால் விபத்துகள் ஏற்படும் நிலை

Published On 2020-11-18 07:34 GMT   |   Update On 2020-11-18 07:34 GMT
திருமங்கலம் அருகே வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சரியான முறையில் மாற்றி அமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருமங்கலம்:

திருமங்கலம் அருகே ஆலம்பட்டி விலக்கு பகுதியில் இருந்து சேடபட்டி இணைப்பு சாலை செல்கிறது. ராஜபாளையம், குற்றாலம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், மதுரையில் இருந்து வரும் வாகனங்களும் ஆலம்பட்டி விலக்கு இணைப்புச் சாலையை கடந்து செல்கிறது.

சேடபட்டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், ராஜபாளையம் மதுரை மெயின் ரோட்டுடன் இணைகிறது. இதனால் வாகனங்கள் 3 சந்திப்பிலும் சந்திக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தடுப்பதற்காக இரும்பினால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வேகத்தடை சரியான முறையில் வைக்கப்படாத நிலையில் வாகனங்கள் முன்னுக்குப்பின் முரணாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த வாரங்களில் மட்டும் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த வேகத்தடையை சரியான முறையில் அமைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒளிரும் மின் விளக்குகளையும் அங்கு அமைத்திட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News