செய்திகள்
கமல்ஹாசன்

கமல் மீதான மகாபாரதம் குறித்த அவதூறு வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை

Published On 2021-05-21 16:51 GMT   |   Update On 2021-05-21 18:03 GMT
மகாபாரதம் குறித்து அவதூறு பரப்பியதாக கமல் எதிராக வள்ளியூரில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் சார்பில் வக்கீல் காந்திமதிநாதன் வள்ளியூர் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்ததாகவும், எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கமல் நேரில் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில்  வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கவும் கோரி கமல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை கமல் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கமல் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முகாந்திரம் இல்லை. எனவே, வள்ளியூர் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள அவதூறு வழக்கு ரத்து செய்யப்படுகிறது என நீதிபரி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News