லைஃப்ஸ்டைல்
காய்கறிகள், பழங்களின் சிவப்பு நிறமும்.. சத்துக்களும்..

காய்கறிகள், பழங்களின் சிவப்பு நிறமும்.. சத்துக்களும்..

Published On 2021-02-13 08:28 GMT   |   Update On 2021-02-13 08:28 GMT
காய்கறிகள், பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுக்கும், அவற்றின் நிறத்திற்கும் தொடர்பு இருக்கிறது. சிவப்பு நிறம் கலந்த உணவு பொருட்கள் எத்தகைய சத்துக்களை கொண்டிருக்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.
காய்கறிகள், பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுக்கும், அவற்றின் நிறத்திற்கும் தொடர்பு இருக்கிறது. சிவப்பு நிறம் கலந்த உணவு பொருட்கள் எத்தகைய சத்துக்களை கொண்டிருக்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.

* சிவப்பு நிற காய்கறி பழங்களில் ஆன்டிஆக்ஸிடென்டுகள், அந்தோசயனின் போன்றவை அதிகம் இருக்கும். சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கும். ரத்த நாளங்கள், மூட்டுகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவும்.

* சிவப்பு நிற காய்கறிகள், பழங்களில் இருக்கும் லைகோபீன் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உணவுகளில் காணப்படும் சிவப்பு வண்ண நிறமிக்கும் இதுதான் காரணமாகும்.

* வைட்டமின் ஏ, சி நிரம்பிய சிவப்பு நிற காய்கறிகள் புற்றுநோய், இதய நோய், கீல்வாத பாதிப்புக்கான அபாயத்தை குறைக்கும் தன்மை கொண் டவை. ஆரோக்கியமான சருமம் மற்றும் முடிகள், நகங்களுக்கும் இவை முக்கியமானவை.

* சிவப்பு நிற உணவு பதார்த்தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்கும் தன்மையும் கொண்டவை. அவைகளில் பொட்டாசியம் நிறைந்திருக்கும். இது இதயத்திற்கும், சீரான ரத்த அழுத்தத்திற்கும் இன்றியமையாதது.

*உடலில் உள்ள செல்களின் அத்தியாவசியமான செயல்பாட்டுக்கு எலட்ரோ லைட்டுகள் முக்கியமானவை. இவை சிவப்பு நிற பழங்களில் அதிகம் இருக்கின்றன. அத்துடன் சோடியம், மெக்னீசியமும் நிறைந்திருக்கின்றன. அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

* பிளவனாய்டுகள் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்டுகளை அளிக்கின்றன. சிவப்பு நிற உணவுகளில் கியூவர்செட்டின் என்ற பிளவனாய்டு உள்ளது. இது ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

* தக்காளி, செர்ரி, ஆப்பிள், வெங்காயம், ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, பிளம்ஸ், சிவப்பு மிளகாய், குடைமிளகாய், சிவப்பு பீன்ஸ், தர்ப்பூசணி, சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற சிவப்பு நிற காய்கறி, பழங்களை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
Tags:    

Similar News