செய்திகள்
கைது

கோயம்பேட்டில் 23 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது

Published On 2021-02-21 02:12 GMT   |   Update On 2021-02-21 02:12 GMT
கோயம்பேட்டில் 23 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:

கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் கோபாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜ், சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் மோட்டார் சைக்கிள் திருட்டு போன இடங்களில் எல்லாம் ஒரு நபரே தொடர்ந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அந்த நபரின் புகைப்படத்தை வைத்து விசாரணை செய்தபோது, மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவை சேர்ந்த யுவராஜ் (வயது 32), என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று யுவராஜை கைது செய்து விசாரித்ததில், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று அதனை ஆம்பூரில் பதிவு எண்ணை மாற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 23 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News